ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா

வயது 5530 அக்டோபர், 1954 – 4 பிப்ரவரி, 2010

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சில்லாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurzach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பெனும் பாதையில் நாம்
அனைவரும் பயணிக்கவும்
எல்லா வளங்களையும் பெற்று
ஏற்றமுடன் வாழ
ஏணியாகத் தாங்கிய எங்களின்
அன்புக்குரியவருக்கு நாம்
கண்ணீரால் எழுதும் கவி மடல்,

காலம் முழுவதும் உங்கள் காலடியில்
கூடிக் கதை பேசி குதூகலித்திருப்போம் என்ற
எங்களின் கனவுகளையும் நேற்றுவரை
எம்மோடு நேர் நின்று யாசித்த எங்களின்
நேசத்திற்குரிய உங்களையும் காலனவன்
ஒரு நொடியில் காவிச் சென்றுவிட்டானே!..

சிறகொடிந்த பறவைகளாய் நாமனைவரும்
தவித்திருக்க நீர் மட்டும்
சிறகடித்து பறந்ததேனோ?
உம்மை அழைக்கும் போது
அன்பாக அருகில் வந்து ஆதரவாக
அனைத்திடும் சுகத்தினை
எங்களால் மறந்திட முடியவில்லை..

எம்பால் உமக்குள்ள கரிசனை எம்
வாழ்விற்கு பாதையாக வழிகாட்டும் என்று
நாம் எண்ணி மகிழ்ந்திருந்தோம் ஆனால்
நீங்கள் எல்லைக் கல்லாக மட்டும்
மாறியது எப்படி?

இறுதிவரை உறுதியோடிருந்து எங்களின்
உறவுகள் வலுப்பெற்று வளர்ந்திட்ட
வாழ்ந்திட்ட உங்களின் பாதச்சுவட்டில்
நாமும் பயணித்து பரகதியில்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
பரமனை பணிந்து தொழுகின்றோம்.

— கண்ணீர் பூக்களுடனும் காலமெல்லாம் உங்கள் நினைவுகளுடனும் வாழும் அன்பு மனைவி புஸ்பா, பிள்ளைகள் ஜெயா, டில்க்கா, உறவினர்கள், நண்பர்கள்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 4 மார்ச், 201031ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.