ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பலம் முத்துக்குமாரு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அம்பலம் முத்துக்குமாரு

கொமாண்டர்

10 ஜூலை, 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்
திருநாவற்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், திருநாவற்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலம் முத்துக்குமாரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உறவு முறைகூறி உறவாடும்
உத்தமரே எம் ஐயா!
உங்கள் உள்ளமது
வெள்ளைதானே
உயர்வான குணங்கள்
பல கொண்டவரே எம் ஐயா!
உதிரும் புன்னகை கொண்டு
எம் துன்பம்தனை துடைப்பவரே!

வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே ஐயா!

உற்றாரின் மரணம் உயிரை உலுப்பும் வரை
மற்றாரின் மரணச்செய்திதான் என்றிருப்போம்
ஆனால் ஊன் உறைந்து உயிர்
வெளித்தெறிக்கும் வலி தந்து உணர்த்தினாயே அன்று
ஆனால் இதயம் நொருங்கிச்
செல்வாயென்று இல்லையே ஐயா!

இன்று தனியாக நடக்கப் பழகிக் கொண்டோமே
நீர் காட்டிய நேர்வழியில் நடப்போமே ஐயா!
உங்கள் அழகு சிந்தனை கனவுகள்
இலட்சியங்களே எங்கள் இறுதி இலக்கு!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே நாம் இங்கே
நெடுங்காலம் நிலைத்து வாழ்வோமே ஐயா!

வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வழப்படுத்துவீரே ஐயா!
நொடிக்குமேல் நொடியாக இன்று போல் என்றும்
நாம் ஐயம் இன்றி உணரும் இப்பிரபஞ்சத்தில்
எம்மோடு இருப்பாயாக!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— உதயகுமார்(உதயன்- மகன்)

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஜூலை, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.