1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ambalam Muthukumaru
July 10, 2016
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Vavu Thirunavankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், திருநாவற்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலம் முத்துக்குமாரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உறவு முறைகூறி உறவாடும்
உத்தமரே எம் ஐயா!
உங்கள் உள்ளமது
வெள்ளைதானே
உயர்வான குணங்கள்
பல கொண்டவரே எம் ஐயா!
உதிரும் புன்னகை கொண்டு
எம் துன்பம்தனை துடைப்பவரே!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே ஐயா!
உற்றாரின் மரணம் உயிரை உலுப்பும் வரை
மற்றாரின் மரணச்செய்திதான் என்றிருப்போம்
ஆனால் ஊன் உறைந்து உயிர்
வெளித்தெறிக்கும் வலி தந்து உணர்த்தினாயே அன்று
ஆனால் இதயம் நொருங்கிச்
செல்வாயென்று இல்லையே ஐயா!
இன்று தனியாக நடக்கப் பழகிக் கொண்டோமே
நீர் காட்டிய நேர்வழியில் நடப்போமே ஐயா!
உங்கள் அழகு சிந்தனை கனவுகள்
இலட்சியங்களே எங்கள் இறுதி இலக்கு!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே நாம் இங்கே
நெடுங்காலம் நிலைத்து வாழ்வோமே ஐயா!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வழப்படுத்துவீரே ஐயா!
நொடிக்குமேல் நொடியாக இன்று போல் என்றும்
நாம் ஐயம் இன்றி உணரும் இப்பிரபஞ்சத்தில்
எம்மோடு இருப்பாயாக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— உதயகுமார்(உதயன்- மகன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

