1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலிங்கம் அமிர்தமணி
வயது 6718 ஜூலை, 1951 – 12 மே, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் அமிர்தமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
மங்காத புகழ் கொண்ட மாதாவே!
உங்கள் உதிரத்தை பாலாக்கித்தந்த தாயே!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்கஉள்ளம் துடிக்குதம்மா!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தில் 18/Jul/1951 ஆம் ஆண்டில் வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளுக்கு தலை மகளாக அமிர்தமணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் பாலவர்ணம், சிகாமணி, தேவகியம்மா, மரகதம், செல்லமணி, திருச்செல்வம் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் நடராசா பூரணம் தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான அன்னலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சுகந்தி, சுகதரன், சுசிதரன், சுயாதரன், சுமதி போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் ரகுநாதன், தவக்குமார், தயாநிதி, கீதா, கௌரி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புறச் செய்ததுடன் சிந்துஜன், மிதுஜன், அபிரா, கவின், அதேஸ், சாதுஸ், கனீர்த்தி, சுயாத், தியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் லெட்சுமி என பாசமாக அழைக்கும் இவர் தனது கடைசி காலங்களில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், பூமரங்களை வளர்த்தலும்,சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 12.05.2019 இல் 67 வயதில் சுவிஸ்ஸில் உள்ள Luzern நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"தீவின் உறவே
......தித்திக்கும் பேச்சே
பாச மலையே
......பண்புக் கடலே
நெஞ்சில் சுமந்த
...... நேச உருவே
பிரிந்து சென்றீரே
......கடவுள் மடி தேடி"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

