மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனி ரஞ்ஜிதன் யோசப்
வயது 561 ஆகஸ்ட், 1962 – 11 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- கொலோன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை கிழக்கு செல்வாவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Koeln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் பாதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, அற்புதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளப்பு, செல்வமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆணந்தராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மெரின், செரின், கத்தரின், பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற மெட்லின் மற்றும் தேவராசா, றோஸ்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆணந்தராசா, லக்ஸ்மன், ஆணந்தஜோதி, மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொலினா, செலினா, ஏஞ்சல், நோவா, செர்வினா, செர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள தீவும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான நாரந்தனை கிழக்கு செல்வாவீதியில் திரு.திருமதி அந்தோணி அற்புதம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.ரஞ்ஜிதன் யோசப் அவர்கள் 01/AUG/1962 இல் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வராசா, மெட்லின், தேவராசா, றோஸ்மலர் ஆகிய உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி அருளப்பு செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகள் ஆணந்தராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மெரின், செரின், கத்தரின், பிரவின் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் பிரதீபன், பிரதீப் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ஜொலினா, செலினா, ஏஞ்சல், நோவா, செர்வினா, செர்வின் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சந்திரா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.06.2019 இல் 56 வயதில் ஜேர்மனியில் உள்ள Koeln நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
தலை மகனே
......தாமரை முகமே
கண்ணாடி வதனமே
.......கரு விழியே
வண்ண அழகே
.......வாழ்வில் உயர்வாய்
தீமை போக்கி
........பிரிந்து சென்றீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

