ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அந்தோனி செபஸ்ரியன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனி செபஸ்ரியன்

வயது 7323 மார்ச், 1934 – 26 மார்ச், 2007

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
ஊர்காவற்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி செபஸ்ரியன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

”இறைவனில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் உயிர் வாழ்வான்”

பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே

எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்

அறங்கள் பல புரிந்தீர்
அந்தோனியின் பக்தனாய் வாழ்ந்தீர்
எல்லாமாய் எந்நாளும்
எமக்கிருந்த ஐயாவே
இல்லாமல் பத்தாண்டு
எங்கே நீர் சென்றுவிட்டீர்

உம்மையே உலகமென எண்ணியே வாழ்ந்திருந்த
அம்மாவின் நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
காவல் தெய்வம் நீர் ஐயா காற்றோடு கலந்ததேனோ
அம்மாவைத் தேற்ற ஐவர் நாம் அருகிருந்தும்
ஐயாவோடு வாழ்ந்த வாழ்வே சிறப்பென போற்றுகிறார்

எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
எம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
இறைவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்

உம் நினைவோடு வாழ்ந்திருக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 25 மார்ச், 20103ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 மார்ச், 20125ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.