10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Antony Sepastian
Age 73March 23, 1934 – March 26, 2007
- Born in
- Kayts
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி செபஸ்ரியன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
”இறைவனில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் உயிர் வாழ்வான்”
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
அறங்கள் பல புரிந்தீர்
அந்தோனியின் பக்தனாய் வாழ்ந்தீர்
எல்லாமாய் எந்நாளும்
எமக்கிருந்த ஐயாவே
இல்லாமல் பத்தாண்டு
எங்கே நீர் சென்றுவிட்டீர்
உம்மையே உலகமென எண்ணியே வாழ்ந்திருந்த
அம்மாவின் நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
காவல் தெய்வம் நீர் ஐயா காற்றோடு கலந்ததேனோ
அம்மாவைத் தேற்ற ஐவர் நாம் அருகிருந்தும்
ஐயாவோடு வாழ்ந்த வாழ்வே சிறப்பென போற்றுகிறார்
எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
எம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
இறைவனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்
உம் நினைவோடு வாழ்ந்திருக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

