ஆறுதல்

மரண அறிவித்தல்

அருளம்மா தம்பிஐயா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளம்மா தம்பிஐயா

வயது 8910 மே, 1930 – 21 அக்டோபர், 2019

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொழுப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா தம்பிஐயா அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,

றணீத்திரன்(கனடா), றதிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், கணேசரட்ணம், துரைராஜா, செல்வரட்ணம், கனகம்மா, பரிமளம்(லண்டன்), மங்கையக்கரசி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகராஜா(உரும்பிராய்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

புவனேந்திரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கரனேஸ், கஸ்தனா, மதுஷா, கஜமுகேஸ், நேமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் 10/MAY/1930 இல் சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியாக அருளம்மா அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார். கனகசுந்தரம், கணேசரட்ணம், துரைராஜா, செல்வரட்ணம், கனகம்மா, பரிமளம், மங்கையக்கரசி, பரமேஸ்வரி எனும் சகோதரங்களோடு குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.

அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனான தம்பிஐயா அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக றணீத்திரன், றதிக்கா ஆகிய பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, புவனேந்திரன், சாந்தினி ஆகியோர்களைத் திருமணம் முடித்து வைத்து, கரனேஸ், கஸ்தனா, மதுஷா, கஜமுகேஸ், நேமிக்கா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் 21.10.2019 இல் 89 வயதில் கனடாவில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.