நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்மா தம்பிஐயா
வயது 8910 மே, 1930 – 21 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் 10/MAY/1930 இல் சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியாக அருளம்மா அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார். கனகசுந்தரம், கணேசரட்ணம், துரைராஜா, செல்வரட்ணம், கனகம்மா, பரிமளம், மங்கையக்கரசி, பரமேஸ்வரி எனும் சகோதரங்களோடு குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.
அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனான தம்பிஐயா அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக றணீத்திரன், றதிக்கா ஆகிய பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, புவனேந்திரன், சாந்தினி ஆகியோர்களைத் திருமணம் முடித்து வைத்து, கரனேஸ், கஸ்தனா, மதுஷா, கஜமுகேஸ், நேமிக்கா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் 21.10.2019 இல் 89 வயதில் கனடாவில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

