1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் அருந்தவராஜா
வயது 4212 மே, 1973 – 2 மே, 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டு
வழிதெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!
சட்டென வந்த கயவர்கள் சத்தங்கள் எதுவுமின்றி
சடுதியாய் உங்கள் உயிரை ஏன் பறித்தனரோ!
எங்குதான் எப்படியோ எடுத்து சென்றார்கள்
உள்ளம் இன்னும் ஏற்க மறுக்குதய்யா
விழித்து நிற்கின்றோம் விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!
காற்றோடு கரைந்தாய் கடைசிமுகம் காட்டாது
அப்பா என நினைத்தாலே
அன்பு முகம் காட்டும் மனதில்
தீராத வடு எமக்கு தந்ததேனோ!
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர் அப்பா?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா?
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர்ப்பூக்கள்
இவ்வண்ணம் ஆறாத்துயரில் கண்ணீர் வழிய
தினம் தினம் உங்களுக்காக
ஆண்டவரிடம் மன்றாடி பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள்
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

