மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுந்தரம் வசந்தமலர்
வயது 665 மே, 1950 – 17 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் வசந்தமலர் அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுந்தரம் அவர்களின் நேசமிகு மனைவியும்,
கிரிவரன்(கிரி- பிரான்ஸ்), கமலவரன்(கமல்- பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, தில்லைநாயகி், மற்றும் இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற அருமைநாயகி, திருச்செல்வம்(இலங்கை), ஜெகராஜா(ஜெகம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன்(கிருபா- பிரான்ஸ்), வரன்யா(சௌமியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா, நவரத்தினம், நடேசபிள்ளை, கமலாதேவி(தேவி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சோமசுந்தரம், மற்றும் விஜயலட்சுமி, இலங்கநாதன், புஸ்பராணி, வரலட்சுமி, காலஞ்சென்ற சொக்கலிங்கம், வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, சிவகொழுந்து ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஓவியா அவர்களின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

