ஆறுதல்

நினைவஞ்சலி

பாஸ்கரன் சஜாஜினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாஸ்கரன் சஜாஜினி

வயது 5030 செப்டம்பர், 1967 – 27 மார்ச், 2018

பிறந்த இடம்
சண்டிலிப்பாய் வடக்கு
வாழ்ந்த இடம்
Bondy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன்(பாபு) சஜாஜினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கணவன் மனக்குமுறல்

என்னைக் கரம்பிடித்து இருபத்தைந்து ஆண்டுகள்
சொன்னது ஒருவார்த்தை சூடாக நானறியேன்
அன்புக்கு இலக்கணமாய் அரவணைத்து வாழ்ந்த ராஜி
பண்பின் சிகரமாய் பணிவாக வாழ்ந்தாயே
எங்கே சென்றாலும் என்னிடம் சொல்வாயே
எங்கே சென்றாய் என்னிடம் சொல்லாமல்?

மகளின் மனக்குமுறல்

என் தோழியே எங்கே சென்றாய்
அம்மா என்மீது அன்பாக இருந்தீர்கள்
எப்போதும் என்னை தட்டிக்கொடுத்தீர்கள்
எப்போதும் நான் தூங்கும்பொழுது
என்னை பார்த்து ரசிப்பீர்களே
இப்போ என்னைவிட்டு எங்கே தான் சென்றீர்கள்
உங்களை எண்ணி ஒவ்வொரு நாளும்
உள்ளம்நொந்து துடிக்கின்றேன் அம்மா
என்னைக் காண எப்போது வருவீர்கள்- என
எண்ணி எண்ணி ஏங்கித் தவிக்கின்றேன்
அம்மா அம்மா....!

அன்னாரின் துயரச் செய்திகேட்டு வெளிநாடுகளிலும், இலங்கையிலிருந்தும், பிரான்சிலிருந்தும் தொடர்பு கொண்டவர்களுக்கும், நேரில் வந்து கலந்துகொண்டு ஆறுதல் சொன்ன அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியை 28-04-2018 சனிக்கிழமை அன்று மு.ப 12:00 மணியிலிருந்து பி.ப 06:00 மணிவரை Salle Marx Dormoy, 50 Rue Torcy, 75018 Paris, France எனும் முகவரியில் நடைபெறும் நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

— கணவர் பாஸ்கரன்(பாபு), மகள், குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 27 மார்ச், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.