மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி கோபாலரத்தினம்
முன்னாள் விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர்
வயது 7830 செப்டம்பர், 1940 – 21 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கோபாலரத்தினம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலரத்தினம்(முன்னாள் உப தபால் அதிபர்- நல்லூர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(லண்டன்), காண்டீபன்(அபுதாபி), மேகலா(ஆசிரியை– யாழ்ப்பாணம்), தனஞ்ஜெயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவேந்திரராசா, ராகினி, இராஜேந்திரன், பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜரட்ணம்(அவுஸ்திரேலியா சிட்னி), தர்மலிங்கம் (Enfield- லண்டன்), மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), வாமதேவன்(Hounslow- லண்டன்), பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), மனோகரன்(Enfield- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவன், விசாகன், கிர்த்தனி, லிதுர்ஷன், விஜித்தன், அபிநயன், தாரணி, கவின், நிலா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் கோவில்கள் சூழ்ந்த நகரமும் விசேடமாக அலங்காரக் கந்தன் அருள்பாலிக்கும் இடமான நல்லூரில் 30/SEP/1940 இல் புவனேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் அறிவு நிறைந்த ஆண் மகனான உபதபால் அதிபரான திரு.கோபாலரத்தினம் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சசிகலா, காண்டீபன், மேகலா, தனஞ்ஜெயன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தவேந்திரராசா, ராகினி, இராஜேந்திரன், பத்மினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பிரணவன், விசாகன், கீர்த்தனி, லிதுர்ஷன், விஜித்தன், அபிநயன், தாரணி, கவின், நிலா, கீரன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராக அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.06.2019 இல் 78 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நல்லை நகர் தந்த
நாயகியே
வல்ல நற் குணம்
நிறைந்தாரே
கள்ளம் இல்லா அன்பு
கொண்டு
எல்லாம் அருளி எமைவிட்டு
பிரிந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

