நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வத்துரை பஞ்சாட்சரம்
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவியும், ஆசிரியையும்
வயது 924 மே, 1928 – 14 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- துன்னாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது
பத்துமாதம் எம்மைச் சுமந்து
பாரினிலே பெற்றெடுத்து
பகல் இரவாய்க் கண்விழித்து
பணிகள் பல புரிந்து
தான் பெற்ற கல்வியைச் சொரிந்து
அகல் விளக்காய் பாரினில் மிளிரவைத்து
அத்திவாரமாக இருந்து- எம்மை
அகிலத்தில் உயர வைத்து
மனிதம் நிறைந்த மக்களாக
இவ்வுலகில் சிறக்க வைத்து
மற்றோர் மதிக்கும் வண்ணம்
மாண்புறு பதவிகளில் திகழவைத்து
மடிந்தனையோ அம்மா நீ
மாதம் ஒன்று ஆனாலும்
மறக்க முடியவில்லையே
மனம் கலங்கி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எங்களை துயரத்தில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எங்கள் தாயின் பிரிவுச் செய்திகேட்டு நேரில் வந்தும், தொலைபேசிவாயிலாகவும், குறுந்தகவல், சமூகவலைத்தளங்கள் ஊடாக எமக்கு ஆறுதல் கூறியவர்களிற்கும், மலர் வளையம், மலர் மாலை, மலர்கள், வீட்டு உட்புகுவாசலில் வாழை, தென்னோலையில் தோரணம் கட்டியவர்களிற்கும், தேவாரம் படித்த, விடியக்காலையில் இழவுசொல்வதில் ஈடுபட்ட, கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் வெளிநாட்டு பழைய மாணவர் சங்கத்தினர்க்கும், பேராதனை வளாக பழைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், விவசாய பாடசாலை, தொழில்நுட்ப கல்லூரி பழையமாணவர்கள், தற்போதைய விரிவுரையாளர்கள், அதிகாரிகள், சகல தேசிய சேமிப்பு வங்கி கிளை முகாமையாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், Covid 19 என்றும் பாராமல் சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 14-10-2020 மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்ற பின்னர் சபிண்டிகரண கிரியைகள் ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Covid 19 சட்டதிட்டத்திற்கு அமைவாக ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசனமும் இடம்பெறும் என்பதனை அறியத்தருக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ். துன்னாலை தெற்கு கொற்ற உடையார் குடும்பத்தினைப் பிறப்பிடமாகவும், நெல்வயல், பனை, தென்னை, பலா, வாழை ஆகிய வளங்களிற்கு உரித்துடைய சின்னையா- பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக 04-05-1928 இல் வந்துதிதார்.
அன்பும், பண்பும் நிறைந்த இவர் சரஸ்வதி, துரைச்சாமி, இராசையா, வீரசிங்கம் ஆகிய உடன் பிறப்புகளுடன் பிறந்த இவர் பருத்துத்துறை மெதடிஸ் உயர் தரப்பாடசாலையில் கல்வி கற்று அதே பாடசாலையில் ஆசிரியையும் ஆனார். மாணவர்கள், உற்றார், உறவினர், சுற்றத்தார், அயலவர்களுடன் அன்பாக இருந்ததினால் அவரை இன்றும் பஞ்சாட்சர அக்கா என அழைப்பார்கள்.
முழுக் கதையையும் வாசிக்க
பெற்றோர் சம்மதத்துடன் மாமன் வல்லிபுரம்(வைத்தியர்) பத்தினி தம்பதிகளின் மகன் செல்வத்துரை என்பவரை திருமணம் முடித்து கணவனுடன் சென்றார் இதனால் தன் ஆசிரியை தொழிலை விட வேண்டி ஏற்பட்டது.
கணவன் அரச தொழில் காரணமாக 2 வருடத்திற்கு ஒருமுறை இடம் மாறி போகும் போது அவர்களுடன் கூட திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் சந்தோசமாக வாழ்ந்த காலத்தில் செல்வகுமாரன், கோபாலகுமாரன், சிவகுமார்ன், நந்தகுமாரன், பஞ்சகுமாரன், பவளராணி ஆகிய பிள்ளைகளைப் பெற்று வெவ்வேறு துறைகளில் அறிவூட்டி வளர்த்து விட்டார்.
உடையார் குடும்பத்தினர்கு என குளக்கட்டு நுணுவில் பிள்ளையார் கோவிலில் 5ம் திருவிழா உள்ளது, மற்றையோர் உதவி இல்லாமல் போக இவரே தனித்து செய்து வந்துள்ளார். போர்ச்சூழல் காரணமாக மூத்த, கடைசி மகன் ஆகிய இரண்டு பேரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.
பின்னர் எல்லோரிற்கும் திருமணம் செய்து வைத்து மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14-09-2020 இல் 92 வது வயதில் இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

