31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி இராஜசிங்கம்
வயது 4712 டிசம்பர், 1962 – 10 ஆகஸ்ட், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 2ம் வட்டாரம் சாவகச்சேரி கச்காய் வீதி(கோவில் குடியிருப்பு) ஐ பிறப்பிடமாகவும், டென்மார்க்(Horsens) நகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இயற்கையின் அழைப்பிதழில் உங்கள்
பெயரும் இருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை
இப்படியும் நடக்கும்
என்றும் நினைத்திருக்கவில்லை
குருதிச் சொந்தமொன்று இல்லையென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் நெஞ்சம்...
அன்பின் ஆணிவேரொன்று அறுந்து போனதை
பொய்யென்றே நினைவெழுந்து நிற்கின்றது.
அண்ணன் என்ற அன்பில் ஆறுதலான அணைப்பில்
துன்பங்கள் தூரவே நின்று கொண்டன...
துயரங்கள் தூரவே வைத்துக்கொண்டு
உயரங்களைத் தொடக் கற்றுத் தந்தவரே
உங்களின் இழப்பிலேதான் இழப்பு என்றால்
என்னவென்று கற்றுக் கொண்டோம்....
விடிகின்ற பொழுதுகளில் எல்லாம் நீங்கள்
வருகின்ற கனவுகளில் கூடவும் நீங்கள்
வெளிச்சத் துகள்களிலும் வெளிப்படும்
கண்ணீர்த் திவலைகளிலும் நீங்கள்
எப்படிச் சொல்வது நீங்கள் இல்லையென்று
திங்கள் ஒன்றாய் நாள்கள் முப்பதாய்
காலங்கள் கழிகின்றன..
ஆயினும் உங்கள் நினைவுகளோடு தான்
எம் வாழ்க்கை சுழல்கின்றது...
— விமலன்(அன்புத் தம்பி), மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

