ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின்

வயது 8019 மே, 1939 – 14 நவம்பர், 2019

பிறந்த இடம்
சுருவில்
வாழ்ந்த இடம்
சுருவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!

நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா

ஆயிரம் உறவுகள் அரவணைக்
கஇருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் சுருவிலில் 19/MAY/1939 இல் திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகள் மேரியோசெப்பின் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அலெக்சாண்டர், யோசேப், சுவக்கின், மேரிஜசிந்தா, அலோசியஸ், லூசியாபத்மினி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் மகனான திரு.ஞானப்பிரகாசம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக அன்ரனி பீற்றர், ஜோண்கில்லறி, ஒசிறோச், செல்வதி, ஜெயாவதி, கெனடி, ஜெயக்குமார், மெரினா தயாவதி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

பிள்ளைகள் பெரியவர்களாக ஆனதும் லூர்துமேரி, சசிலா, தனவதி, ஜோர்ஜ் சைமன், நரேன், ஜெயந்திமாலா, அனிஸ்ரெலா, அருள்தாஸ் என்பவரை திருமணம் முடித்து வைத்ததுடன் தனது வம்ச வளர்ச்சிகளான பமிலா, டவுரின், அக்கினி, நிரோஸ், வினு, திலக்‌ஷன், ஜெனக்‌ஷன், அஜந்தன், கஜீவன், விதுஷா, விந்துஷா, கினுஷா, யதுஷன், கெளரீசன், தனுஜன், லக்‌ஷனா, ரஞ்சனி, வழுதி, கணியன், றக்‌ஷனா, திபாஷனா, கனோஜன், சாளினி, திலானி, சறோஷினி, அபிஷன், அஜய்ஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.11.2019 இல் 80 வயதில் சுருவிலில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னையே எங்கள் ஆருயிர் தெய்வமே
நன்மைகள் பல புரிந்த உள்ளமே
பண்பை வளர்த்து பாலூட்டிய உயிரே
நின்னைக் கூற நிறைய உள்ளதே
ஆயிரம் உறவில் உமைப் போல்
உயரிய உறவு கண்டிலோம்.
பிரிந்தீரே எமை விட்டு

பிற அறிவித்தல்கள்

  1. 15 நவம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 11 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.