மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரி ஜெகநாதன்
வயது 9131 மார்ச், 1928 – 1 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயானி, சுஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி- செல்வரத்தினம், காலஞ்சென்ற தனலட்சுமி- லங்கநாதன், தங்கராணி- அருணாச்சலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி அவர்களின் அன்பு மாமியாரும்,
மைத்திரேயி கார்த்தீபன், மதுரமி நிமந்த, வாஞ்சிதா லோஹன், ஹரிராம் சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அவ்னியேஷ், ஆரூஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பு வாய்ந்ததும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 31/MAR/1928 இல் ஞானேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் திலகவதி-செல்வரத்தினம்,தனலட்சுமி-லங்கநாதன்,தங்கராணி-அருணாச்சலம் எனும் சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் ஜெகநாதன் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் வாழ்க்கைப் பயனாக தயானி, சுஜந்தன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பவானி என்பவரை திருமணம் முடித்து வைத்து மைத்திரேயி கார்த்தீபன், மதுராமி நிமந்த, சஞ்சிதா லோஹன், ஹரிராம் சுஜந்தன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அவ்னியேஷ், ஆரூஷ் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர்கள்,உற்றார் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.10.2019 இல் 91 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார்.
மலேசிய மண் தந்தமாணிக்க ஒளியே
புன்னகை ததும்ப பேசிடும் உறவே
ஞானம் நிறைந்த உருவே
நல்லதை நினைத்து வாழ்ந்த
நல் மனமே நின்னை
நினைத்து நித்தம் ஏங்குகிறோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

