அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோபிநாத் காசிவிஸ்வநாதன்
BA Hons, Brent Council Benefit Assessment Officer
வயது 274 மார்ச், 1992 – 16 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபிநாத் காசிவிஸ்வநாதன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், யாழ் கரவெட்டி துன்னாலை வடக்கு வல்லியானந்த பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகள், அல்வாயைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம், இராசமணி தம்பதிகளின் பாசமிகு அன்புப் பேரனும்,
காசிவிஸ்வநாதன் சுமித்திரா தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
பிரேம்நாத், பிரதீப் ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரரும்,
வாமதேவன் இந்திரகுமாரி(இலங்கை), தயாபரன் சுஜித்திரா(ஜேர்மனி), சிவராஜன் கலா(லண்டன்), செல்வநாதன் நிலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
மனோகரன்(லண்டன்), சுபேந்திரன்(லண்டன்), செல்வச்சந்திரன்(லண்டன்), சத்திவடிவேல்(சுரி- ஜேர்மனி), ஜெயச்சந்திரன் (அவுஸ்திரேலியா), சிறிசங்கர்(கோபு- லண்டன்), உமாசங்கர்(பாபு- லண்டன்), குகதாசன், மஞ்சுளா, சாரதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ரகுநாத்(லண்டன்), சஞ்சீவன், ராதிகா(இலங்கை), றொமேஸ்(லண்டன்), டினேஸ்(லண்டன்), நரேஸ்(லண்டன்), சிந்துஜா(லண்டன்), சிந்தூரன்(லண்டன்), சௌமிஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற சசிதரன்(இலங்கை), சரண்யா, கிரிசங்கர்(லண்டன்), சுலக்சனா(இலங்கை), ஷாகித்தியன்(இலங்கை), பிரவீனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறாவாச் சகோதரரும்,
ஜனுசிகா, நந்திதா(இலங்கை), கிசானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
உலகில் அழகு நிறைந்த நாடும், 2ம்உலக போருக்கு முன் வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கியதும், பின்னர் அழிவில் இருந்து மீண்டதுடன், குறிப்பாக நாட்டுப்பற்று மிகுந்த மக்களை கொண்டதும் அற்பணிப்புள்ள இளைஞர்களைக் கொண்டதுமான வேகமாக வளர்ச்சி அடைந்த அழகு நிறைந்த ஜேர்மனியில் 04-03-1992 இல் காசிவிஸ்வநாதன் சுமித்திரா தம்பதிகளுக்கு அழகிய புதல்வனாய் கோபிநாத் அவர்கள் பிரேம்நாத், பிரதீப் ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த நாட்டில் அவதரித்தார்.
இவர் அன்பும் அழகும் நிறைந்த யாழ்.கரவெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசமணி/பாலசுந்தரம் இராசமணி ஆகியோரின் அன்பில் பேரப்பிள்ளையாக மெல்ல மெல்ல குறும்புகள் நிறையப் புரிந்து இளைஞராக வளர்ந்தார். மேலும் இவர் படித்து BA Hons.முடித்ததுடன், ஜேர்மன் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்திலும் நன்றாக கல்வி கற்று ஆசிரியர்களின் மனதில் நிலைத்த ஆழுமையுள்ள மாணவனாவான், பின்னர் Brent council Benefit Assessment Officer ஆக வேலையையும் பார்த்த கடின உழைப்பாளியாவார்.
முழுக் கதையையும் வாசிக்க
வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு அப்பா, அம்மா, சகோதரங்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.04.2019 இல் 27 வயதில் இங்கிலாந்தில் உள்ள Harrow நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
இளமை வயதில்
......இழந்தோம் உமை
இறைவன் உம்மில்
......இரக்கம் மறந்தான்
கருணை உறவே
.....கடவுள் உள்ளமே
கலங்கி நிற்கிறோம்
.....காட்சிக்கு ஏங்குகிறோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

