ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா

ஜெயம், மங்கலம்

வயது 9325 பிப்ரவரி, 1926 – 10 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
அல்வாய்
வாழ்ந்த இடம்
ஹற்றன், கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உங்கள் முகம் பார்த்து

குன்றின் மணியே குளவிளக்கே- எம்மை பெற்றெடுத்த
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எங்கள் அன்னையே
வித்தகியே! கல்வியின் தத்துவத்தை புகட்டி எம்மை வித்தகராய் ஆக்கிய எம் குருவே

எத்தனை ஆண்டுகள் ஓடினாலும்
என்றும் அழியாத உங்கள் பாசமும் நினைவும் எம்மை விட்டு அகலாது அம்மா
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள்

We have learned many things from you but we have not learned
how to live without you ammah.
Now we need to learn how to live with your memories.
Your indelible Love, Care, Affection and Memory will never leave us.
Peace be upon your soul forever.
Your absence is deeply missed by your Children:
Shanthikumar, Rajkumar
Shyamala, Jayacumar
Sasikala and Geethanjali,
Grandchildren, brother and in laws,nieces and nephews...

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,கற்பகதரு நிறைந்து காணப்படுவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வடமராட்சி அல்வாயில் 25/FEB/1926 இல் திரு.திருமதி தங்கம்மா வெற்றிவேல் தம்பதிகளின் அருமை மகளாய் ஜெயமங்கலேஸ்வரி அவர்கள் Dr.வெ.செல்வரட்ணம், சிவஞானரட்னம், பரமேஸ்வரி பரராஜசிங்கம், ஆனந்தரட்னம் போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் மாவிட்டபுரம் திரு.திருமதி அழகம்மா செல்வதுரை தம்பதிகளின் அன்பு மகன் திரு.சேனாதிராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சாந்திகுமார், ராஜ்குமார், சியாமளா, ஜெயக்குமார், சசிகலா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து கௌரி, அருனா, வரதராஜா, தயாலினி போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து டிலன், மகிமன், ஆதித்தன், சிவப்பிரியா, ஆதவன், ஐங்கரன், அபினா, அபிஷன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ஹற்றன்,கொழும்பு என்பவற்றில் வாழ்ந்த இவர் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும், ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.08.2019 இல் 93 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

"கஸ்ரங்கள் விலக்கி கடமையை செய்து
இஸ்ர மனதுடன் இன்பமாய் வாழ்ந்த
புஸ்ப குணமே உங்கள் குணம்
விஸ்வ ரூபமாகி விடிவைத் தந்த
இஸ்ர தேவதையே எங்கே போனீர்"

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 11 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.