1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன்
வயது 4818 ஏப்ரல், 1971 – 10 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வரப்போவதில்லை என்பது - நம்
மனதில் நிலையாய் நின்றாலும் - உம்
நினைவுகளை நம்மால் மறக்க முடியவில்லை
மறப்பதும் நினைப்பதும் மனித இயல்பு
மறக்கவே முடியாமல் நெஞ்சினில்
பச்சைமரத்தாணி போல் பதிந்துவிட்டது எம்
பதியின் நினைவுகள்
பன்னிரண்டு மாதங்கள் பார்த்திருக்க
பறந்து போனாலும் எம் மனதைவிட்டு
அகலவில்லை எம் அகல்விளக்கின்
அன்றைய நினைவுகள்
காலங்கள் கைகொடுத்து விடைபெற்றாலும்
கணப்பொழுதினில் காலனவன் கவர்ந்து சென்ற
உமது ஆத்ம நினைவுகள் எம் நெஞ்சினில்
நிழவாய்த் தொடரும்
உறவுகளை இவ்வுலகில் விட்டுவிட்டு நீர்
சொர்க்கத்தில் அமர்ந்துவிட்டீர்
வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடுபோல விலகாமல்
என்றென்றும் இருக்கும் எம் இதயங்களில்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

