ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலாதேவி சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாதேவி சதாசிவம்

Internationally renowned Professional flutist and flute teacher

வயது 7419 செப்டம்பர், 1945 – 26 மே, 2020

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சதாசிவம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவபரமானந்தன், ஞானதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரோஜினிதேவி மற்றும் மனோகரிதேவி, அருள்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வீணா, ஜனனி, நிரஞ்சனா, ஜெயந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சரண்யா, கிருஷ்ணா, கார்த்திகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ms. Kamaladevi Sathasivam was born in Colombo and lived in Canada Toronto and passed away peacefully on Tuesday 26th May 2020.

The loving beloved Daughter of Mr. Sathasivam and Mrs. Parasakthy Sathasivam.

The beloved sister of Sivaparamananthan, Gnanadevi, late Pathmanathan, late Sarojinidevi, Manoharidevi and Arulnathan.

She is also the chithi and periyama of Saranya, Krishna, Veena, Karthika ,Nanthini, Janani, Niranjana, and Jeyanthi.

This Notice is provided for all family and friends.

வாழ்க்கை வரலாறு

Ms. Kamaladevi Sathasivam, born on September 19th 1945 in Sri Lanka is the daughter of Mr. Ponnampalam Sathasivam and Mrs. Parasakthy Sathasivam. Her siblings include Sivaparamananthan, Gnanadevi, the late Pathmanathan, the late Sarojinidevi , Manoharidevi and Arulnathan.

Ms. Kamala obtained her early education in St. Clare's Balika Maha Vidyalaya and following that she pursued further education at Saiva Mangaiyar Vidyalayam also known as Hindu Ladies College. While pursuing these studies, she was actively and passionately pursuing music, specifically the Carnatic music and the Bamboo flute. She is the disciple of Vidwan Harikesa Nallur Shri Ramasamy Iyer and started performing at the age of 16. As she grew into the proficiency of a Carnatic flutist, she was actively involved with the Sri Lanka Broadcasting Corporation and the Rupavahini Corporation and was a prominent music producer in the music division. In addition to her notable involvement in the corporation, she was an active member of the Ramakrishnan Mission and also was keen in performing for many benefit shows for various charity organizations such as orphanages in Amparai and Batticaloa districts, the Mother Theresa organization and many more. All this involvement earned her the title Venu Gaana Varshini in Sri Lanka.

முழுக் கதையையும் வாசிக்க

As a daughter, Kamala has been a pillar of strength for the entire family during her father’s last periods and post the 1983 riots. She naturally wanted to find opportunity and made her way to Canada in 1989. In Canada she quickly became an active member of the music industry and the South Asian community as a professional flutist and flute teacher. She also was pursuing studies in Finance and was also working in the Finance industry.

Her involvement in music in Canada spans from being a professional flutist and performer for various recitals (kacheris) including McMaster university, arrangetrams, charity shows to giving lectures at SPICMACY (Society for Promotions of Indian Classical Music and Culture Amongst Youth) and running her own flute academy in Toronto. Moreover, she has taken her talent to various parts of the world, which include America, various parts of Europe such as Germany, U.K., etc, various part of Southern Africa such as Botswana, Durban, Johanesburg, other countries such as Singapore, Malaysia and many more.

As it is evident, Ms. Kamala Sathasivam is a self-made woman and has been quite successful. She has left her mark very clearly in her own way in the music industry. It is with great honour and privilege that we celebrate her life. Thank you for all your well wishes and condolences to the entire family.

இலங்கையின் முன்னணிப் புல்லாங்குழல் வாத்திய இசைக் கலைஞர் செல்வி. கமலாசதாசிவம் என்று அறியப்படும் கமலாதேவி சதாசிவம் 2020ஆம் ஆண்டு,மே மாதம், 26ஆம் திகதி ரொரன்ரோவில் காலமானார்.

1945ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், 19ஆம் திகதி இலங்கையில் பிறந்த கமலாதேவி சதாசிவம் அவர்கள், காலம்சென்றவர்களான பொன்னம்பலம் சதாசிவம், திருமதி. பராசக்திசதாசிவம் ஆகியோரின் புதல்வியும், சிவபரமானந்தன், ஞானதேவி, காலம்சென்ற பத்மநாதன், காலம்சென்ற சரோஜினிதேவி, மற்றும் மனோகரிதேவி, அருளநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

கமலாசதாசிம் அவர்கள் 70-களிலும் 80-களிலும் கொழும்பில் பிரபலமான புல்லாங்குழல் வாத்திய இசைக்கலைஞராக விளங்கியவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கர்நாடக சங்கீதவாத்தியக் குழுவில் புல்லாங்குழல் இசைக்கலைஞராக இணைந்து கொண்ட செல்வி. கமலாசதாசிவம் பின்னர் தமிழ்ச்சேவையின் இசைப்பிரிவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

புல்லாங்குழல் வாத்தியத்தை இசைக்கும் கர்நாடக இசைக் கலைஞர்கள் மிக அரிதாக இருந்த அந்தக் காலத்தில், பெண் புல்லாங்குழல் இசைக்கலைஞராகத் தனித்துவத்துடன் விளங்கியவர் கமலாசதாசிவம் அவர்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தெரிவு செய்யப்பட்ட புல்லாங்குழல் வாத்தியக் கலைஞராகப் பலவானொலி இசைக்கச்சேரிகளைக் சிரமமாகச் செய்து இசையுலகில் ஒருதனியிடத்தைப் பெற்ற கமலாசதாசிவம் அவர்கள்,அக்காலத்தில் கொழும்பு இசைமேடைகளில் புல்லாங்குழல் இசைக்கச்சேரிகளைச் செய்துவந்தார். கொழம்பில் இடம்பெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் இவர் தவிர்க்க முடியாத ஒரு கலைஞராக விளங்கினார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் தனது புல்லாங்குழல் இசைக்கச்சேரியை இசைத்தட்டாக வெளியிட்ட கமலாசதாசிவம் அவர்கள்,ரூபவாஹினித் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பல இசை, நடனநிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இசைத்துறையில் இவரது திறமையைப் பாராட்டி வேணுகானவர்ஷினி என்று பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர் கமலாசதாசிம் அவர்கள். இவர்தனது இசைத் திறமையைப் பல பொதுச்சேவைகளுக்கு நிதி சேகரிப்பதற்காகப் பயன்படுத்தி உதவியிருக்கிறார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இயங்கும் அனாதை இல்லங்கள் மற்றும் அன்னை திரேசா தொண்டு நிறுவனம் முதலியவற்றுக்கு நிதி சேகரிப்பதற்காக புல்லாங்குழல் இசைக்கச்சேரி செய்து உதவிய கமலாசதாசிவம் அவர்கள், இசைச்சேவையில் தன்னைமுழுமையாகஈடுபடுத்திக்கொண்டவர்.கொழும்பில் ஆரம்பக் கல்வியை சென்ற. கிளயர் மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்து இந்து மகளிர் கல்லூரியாகியசைவமங்கையர் கழகத்திலும் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்ட கமலாசதாசிவம் அவர்கள்,மிகச் சிறுவயதிலேயே அப்போது சைவமங்கையர் கழகத்தில் இசையாசிரியராகப் பணியாற்றிய ஹரிகேஸநல்லூர் சிறீ. இராமசாமிஐயரிடம் புல்லாங்குழல் இசையைப் பயிலத் தொடங்கி அவரிடம் பிரத்தியேகமாகவும் படித்துத் தனது திறமையைவளர்த்து பதினாறாவது வயதில் முதல் மேடைக்கச்சேரி செய்து அனைவரது பாராட்டையும் பெற்றவர்.

தனது குடும்பத்தினர் மீது மிகுந்த பற்றுடைய கமலாசதாசிவம் அவர்கள், 1989ஆம் ஆண்டுகனடாவுக்குக் குடிபெயர்ந்தார். ரொரன்ரோவில்இசைக்கலைஞர்கள் மிகக் குறைவாக இருந்த காலத்தில் அனுபவம் வாய்ந்த முக்கிய மூத்த கலைஞராகப் பல கச்சேரிகள், அரங்கேற்றங்கள் என்று ஓய்வில்லாது இயங்கினார். அத்தோடு ரொரன்ரோவில் இளைஞர்களுக்குக் கர்நாடக இசையில் ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்துவதற் கெனப் பல விரிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார். ரொரன்ரோ இளைஞர்களுக்குப் புல்லாங்குழல் வாத்திய இசையைப் பயிற்றுவிப்பதற்காக சொந்தமாக ஒரு இசைப்பள்ளியை நடத்தி வந்த கமலாசதாசிவம் அவர்கள், இங்கு தொழில் பெற வேண்டி நிதித்துறையில் கல்விகற்று அத்துறையிலும் பணியாற்றினார்.

கர்நாடக இசைத்துறையில் ஒரு தனித்துவமான பெண் புல்லாங்குழல் வாத்திய இசைக்கலைஞராக இலங்கையிலும் கனடாவிலும் திகழ்ந்தகமலாசதாசிவம் அவர்கள், அமெரிக்க, ஐரோப்பிய, ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றுக்குச் சென்று இசைப்பணியாற்றியிருக்கிறார். கமலாசதாசிவம் அவர்கள், இசைத்துறையில் ஆற்றிய சாதனைகளும் சேவையும் போற்றுதற்குரியவை. இசைத்துறையில் தனக்கெனத் தனியான தடம் பதித்து மறைந்த வேணுகானவர்ஷினி கமலாசதாசிவம் அவர்களின் இசைச்சேவையை நினைவுகூர்ந்து அவரது ஆத்தம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.