1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி கந்தசாமி
வயது 6720 டிசம்பர், 1951 – 25 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்துபெற்ற என் அன்புத் தாய்க்கு
ஆயிரம் தான் படைத்தாலும்
என் அன்பு அம்மாவின் பெருமைக்கு
ஆயிரம் பூக்கள் தூவுமே
ஆண்டொன்று ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள்
விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!
சட்டென வந்த காலன் சடுதியாய் உன் உயிரை
ஏன் தானோ எடுத்து சென்றான்
அம்மா நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உன்னை நினைத்து எங்கள் நெஞ்சம் துடிப்பதென்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆயிரமாகட்டும்
மறப்போமா உன்னை!
உன் அன்பு முகத்தை அம்மா ...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் ஏழாலையில் 20/DEC/1951 இல் திரு.திருமதி. ஐயாத்துரை பராசக்தி தம்பதிகளின் அருமை மகளாய் கமலாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு. கந்தசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சுதாஸ்கரன், சுதாஜினி, ஜெயாநந்தினி, கிருபாகரன், விமலராஜினி, தர்சினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பாமினி, தேவதாசன், குமாரதாஸ், கௌசலா, உதயகுமார், அஜந்தன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அபினாஷ், அகிளாஷ், சஜீவினி, திலக்ஷன், கிஷாளன், டிசானி, டெனுசா, விபிசா, திவிசா, ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, சனோஜன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் குணம் என அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.07.2019 இல் 67 வயதில் ஜேர்மனியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஏழாலை மண்ணின்
எழில் வதனமே
பாழாகாமல் காத்த
பாச உறவே
வாழும் வரை
வசந்தமாய் விளங்கி
மீளா நித்திரையில்
ஆழ்ந்தீரே இப்போ
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

