ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு11 செப்டம்பர், 1969
இறப்பு28 பிப்ரவரி, 2019
கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் படம்

கணபதிப்பிள்ளை ஜெயசீலன்

வயது 49

பிறந்த இடம்: ஒட்டுசுட்டான்வாழ்ந்த இடம்: London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈராறு மாதங்கள் ஆறாக ஓடியதோ
என் தெய்வம் போயிப்போ வருடம் ஒன்றானதோ
ஓராறு கண்ணீரில் எம் பயணம் போயினதோ
செகத்தினிலே எனை வாழவைத்த செல்வமே மன்னவரே
விண்ணுலகு நீர் போக எம் வாழ்க்கை தடுமாற
ஆண்டவனே இது தகுமோ யாரிடம் சொல்லியழ
பொல்லாத வாழ்வினிலே பொன்னான வாழ்விழந்தேன்
நாம் வாழ்ந்த கதை கனவென்று நான் உணர்ந்தேன்
தக்கதுணை உமை பிரிந்து தனி மரமாய் ஆனோம்
போனவழி நான் வருவேன்
வானுலகு போன உம்மை வையகம் இருக்கும் வரை
உமை மறவோம் உத்தமரே!

அப்பா அப்பா என ஆயிரம் முறை அழைத்தாலும்
ஆசையோ அடங்காது அழைக்கவே மனம் ஏங்கும்
தப்பாக நாமேதும் செய்தாலும் அப்பா நீர்
தக்கவழிதனிலே கண்டிப்பீர் மனம் தாங்கும்
வீடுவெறிச்சோட வேதனையில் நாம் வாட
வேகிறது மனமெமக்கு மகிழ்சியின்றித் துயர் பாட
காடுநீர் போக களிப்பின்றி உமைத்தேட
கண்ணீரே வாழ்க்கையப்பா காட்சிதர வாருமப்பா
எம்மால் முடியவில்லை எம்மப்பா இங்கு வாழ
ஏது வழி எங்களுக்கு நீரின்றி இன்னும் வாழ
ஆண்டொன்று போனதப்பாஆசைமுகம் பார்த்து
ஆண்டவனைக் கேட்கின்றோம் அப்பா உமைச்சேர
மீண்டும் நாம் வாழ்வதற்கு கால மொன்று வாராதோ
வந்திட்டால் வந்து விடும் வள்ளலே எம்மப்பா

ஈராறு மாதங்கள் ஓடி மறைந்தன
ஓயவில்லை நம் விழியோரம் ஓடும் கண்ணீர் துளிகள்
ஒரு முறை ஓடி வாராயோ
மறுபடியும் உன்முகம் காட்டாயோ
சிரித்து பல நாளாச்சு
சொந்தம் ஒன்று கூடி பல மாதம் ஆச்சு
அண்ணன் இல்லா வாழ்வில்
அச்சமின்றி வாழ்ந்தாலும்
அன்பு காட்ட யாருண்டு?
துயரங்கள் தீர்த்திடும் தூய உள்ளம் கொண்டவரே
துடிக்கும் உன் உறவுடன்
மீண்டும் ஒர் முறை வாழவேண்டும்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 2 மார்ச், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 பிப்ரவரி, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.