1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையாபிள்ளை உலகநாதன்
சீமாட்டி சில்க் - கனடா, முன்னாள் பிரபல வர்த்தகர்- இரத்தினபுரி, யாழ்ப்பாணம், முன்னாள் தபால் அதிபர்- புங்குடுதீவு வல்லன்
வயது 8830 ஜனவரி, 1928 – 9 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையாபிள்ளை உலகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புறு உருவு கொண்டு
அருளுறு நெறிகள் காட்டி
பண்புறு நடத்தையாலே
பாரெரெல்லாம் பணிவு கொள்ளும்
கண்ணூறு படுமோ என்று மக்கள்
கலங்கிடும் கண்ணகை பக்தன்
உயர்திரு கந்தையா உலகநாதன்
கடமைகள் நிறைவு கண்டு
கலட்டியான்பதம் புகுந்தார்
இன்று காலமோ ஆனதொன்று!
பேறது கதிதான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
பரமனே தகுமோ ஐயா
நேரது உங்கள் பாதம்
நெடுவழி காத்திருந்து
இருவிழி நீர்ததும்ப
கைகூப்பிக் கரைந்து விம்மி
நெஞ்சு பதைத்து நாங்கள்
நொடிந்து துடிக்கின்றோம்!
நெடுந்தூரம் விட்டு விட்டோம்!
காலனைக் காலாலுதைத்த
கடவுளே பரமா நீயெம்
எந்தையைக்காத்து மீட்க
எழுந்திங்கு வாராததேனோ..?
பரமனே விட்டால் என்ன
பரந்தாமன் விட்டால் என்ன
பராசக்தி பதம்பணிந்தே
பாதத்தில் இறக்கி வைத்தோம்
பக்தியில் கேட்பதெல்லாம்
தாயேபரகதி நல்கு என்றே!
அன்னாரின் ஆத்மசாந்திக்காக மனமுருகிப் பிரார்த்திக்கும்
கனடா, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய இடங்களில் வசிக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
சகோதரங்கள், மைத்துனிமார், பெறாமக்கள்
மற்றும், உற்றார், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

