நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கனகராயர்
வயது 7810 மே, 1941 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
கிளிநொச்சியில் பச்சை வயல்களும் சலசலத்து ஓடும் நீரோடையும் காற்றில் நெல்மணிகள் அசைந்தாடும் இடமும், படித்த சமுதாயத்தைக் கொண்ட அழகு நிறைந்த பூநகரியில் 10/MAY/1941 இல் திரு.திருமதி கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின்
அன்பு மகனாக திரு.கனகராயர் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பூரணம், சண்முகலிங்கம், தனலட்சுமி, கமலாதேவி எனும் சகோதர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி சதாசிவம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் சத்தியபாமா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உதயராஜ், இரத்தினராஜ், ரஜினி, நளினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சுவந்தினி, ஜெயரதி, மனோகரன், பிரதாபன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து விஸ்ணு, வருணிகா, அருசன், தென்னவன், கைலவன், யதுஸ்கா, டயானி, அருகன், ஒவிகன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.09.2019 இல் 78 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
பூநகரி மண்ணின் பூவிழியே
நந்தவனத்து நற் பூவே
பந்தபாசம் நிறைந்த உறவே
வந்தோம் உம்மால் பூமியில்
வளர்ந்தோம் அன்பு வளர்ப்பால்
எண்ணங்கள் நிறைவேற்றி
எமை விட்டுப் பிரிந்தீரே.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

