ஆறுதல்

நன்றி நவிலல்

கந்தையா கெங்கநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கெங்கநாதன்

ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்

வயது 7323 மார்ச், 1946 – 6 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
முரசுமோட்டை, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

எங்கள் தந்தையின் பிரிவால் நாம் நிலைகுலைந்த வேளையில் பிரிவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியூடாகவும், முகப்புத்தகம், குறுஞ்செய்தி, மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எம்மை தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும், அப்பாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு எமக்கு ஆறுதல் கூறிய எம் உயிர் நண்பர்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் இத்தருணத்தில் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் நல்லூர் வடக்கு கல்வியங்காட்டில் 23/MAR/1946 இல் திரு.திருமதி கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.கெங்கநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அன்னலட்சுமி, இராசையா, மயில்வாகனம், சிவக்கொழுந்து, இராசேந்திரம், மனோன்மணி எனும் சகோதரர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி கனகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் புஸ்பராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தயாளசீலன், தர்சினி, சறோஜினி, சுபாஜினி, தர்மசீலன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து லக்சனா, ஜெயம், நாதன், மோகன், காயத்திரி போன்றோரை திருமணம் முடித்து வைத்து இஷானா, டிருஜன், சுபீனா, விருஜன், லவ்யன், சாரங்கன், யாதவி, மதுமிதா, நர்மிதா, ஜவின் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் சில காலம் முரசுமோட்டை 3ஆம் யூனிற்றில் வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.09.2019 இல் 73 வயதில் வவுனியாவில் உள்ள திருநாவற்குளத்தில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

”அன்பு மலரே
......தந்தை முகமே
அணைத்து மகிழ்ந்த
......ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று
....அகிலம் துறந்தது
தந்தை மடியின்
.....ஆயுள் முடிந்தது"

பிற அறிவித்தல்கள்

  1. 7 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.