மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கெங்கநாதன்
ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்
வயது 7323 மார்ச், 1946 – 6 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- முரசுமோட்டை, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் வடக்கு கல்வியங்காடு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கெங்கநாதன் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளசீலன், தர்சினி, சறோஜினி, சுபாஜினி, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சனா, காலஞ்சென்ற ஜெயம் மற்றும் நாதன், மோகன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராசையா, மயில்வாகனம், சிவக்கொழுந்து, இராசேந்திரம் மற்றும் மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகமுத்து, நாகம்மா, காலஞ்சென்ற ஜானகியம்மா, மனோன்மணி, நீலாயதாட்சி, காலஞ்சென்ற குஞ்சிதபாதம், தவமணி, பாலசுப்பிரமணியம், கௌரி, விமலாதேவி, கனகாம்பிகை, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரட்ணம், கனகம்மா, சந்திரசேகரம், தம்பிநாதன், ஞானச்சந்திரன், படியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இஷானா, டிருஜன், சுபீனா, விருஜன், லவ்யன், சாரங்கன், யாதவி, மதுமிதா, நர்மிதா, ஜவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் திருநாவற்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் நல்லூர் வடக்கு கல்வியங்காட்டில் 23/MAR/1946 இல் திரு.திருமதி கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.கெங்கநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அன்னலட்சுமி, இராசையா, மயில்வாகனம், சிவக்கொழுந்து, இராசேந்திரம், மனோன்மணி எனும் சகோதரர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி கனகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் புஸ்பராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தயாளசீலன், தர்சினி, சறோஜினி, சுபாஜினி, தர்மசீலன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து லக்சனா, ஜெயம், நாதன், மோகன், காயத்திரி போன்றோரை திருமணம் முடித்து வைத்து இஷானா, டிருஜன், சுபீனா, விருஜன், லவ்யன், சாரங்கன், யாதவி, மதுமிதா, நர்மிதா, ஜவின் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் சில காலம் முரசுமோட்டை 3ஆம் யூனிற்றில் வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.09.2019 இல் 73 வயதில் வவுனியாவில் உள்ள திருநாவற்குளத்தில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
”அன்பு மலரே
......தந்தை முகமே
அணைத்து மகிழ்ந்த
......ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று
....அகிலம் துறந்தது
தந்தை மடியின்
.....ஆயுள் முடிந்தது"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

