மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இராஜசிங்கம்
ஓய்வுபெற்ற மது வரித்திணைக்கள உதவி ஆணையாளர்- வவுனியா
வயது 7420 நவம்பர், 1941 – 3 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Tellippalai, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை கட்டுவன் வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராஜசிங்கம் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெஜஞானவதி(ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர்- காசில் மகப்பேற்று வைத்தியசாலை, பொரளை) அவர்களின் அன்புக் கணவரும்,
றவீன்(பொறியியலாளர்- கனடா), கஜன்(ஐக்கிய அமெரிக்கா), றஜீத்(கனடா), றஜீவன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாமினி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

