ஆறுதல்

நினைவஞ்சலி

கந்தையா சச்சிதானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சச்சிதானந்தன்

முன்னைய உரிமையாளர் ஆனந்தன் எலெக்ரிக்கல்ஸ் - சாவகச்சேரி

வயது 7125 மே, 1940 – 27 மார்ச், 2012

பிறந்த இடம்
நாவற்குழி கிழக்கு
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சாவகச்சேரி நாவற்குழி கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சச்சிதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் வழி நடத்திய – எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா….
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
எங்கள் வாழ்வில் எத்தனை தான் இன்பங்கள் இருந்தாலும்
அது அத்தனையும் நீங்களாகுமா அப்பா?…..
தாங்க முடியவில்லையே தாங்க முடியவில்லையே

எம்மை பெற்ற எம் தந்தையே!
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள்?
அம்மாவை தவிக்க விட்டு தனியே எங்கே சென்றீர்கள்?
இன்னும் பல காலங்கள் எம்மோடு
இருப்பீர்கள் என்று தானே நாம் நினைத்து
இருந்தோம். கற்பனையில் கூட நாம் நினைக்கவில்லை
சட்டென- கணப்பொழுதில்எம்மை விட்டு போய் விடுவீர்கள் என்று
உடலை உருக்கி உழைத்து எங்களையெல்லாம் வாழ்வினில் உயரவைத்து,
ஊர் போற்ற வாழ வைத்த எங்கள் அன்பு தெய்வமே…
நாம் இங்கு காத்திருக்க, உறவுகள் பார்த்திருக்க,
அம்மாவை பார்த்து ஒரு வார்த்தையாவது கதைக்காமல்
போய் விட்டீர்களே அப்பா…..

உற்றார் உறவினர் மதிக்க வாழ்ந்தீர்கள்,
என்றும் காலத்தால் அழியாத அன்பு தந்தீர்கள்,
நிழலோடு கனி தந்து நின்றுவிட்ட நெடிய மரம்
வேரோடு வீழ்ந்தது போல எம்மை விட்டு எங்கு சென்றீர்கள்?
இன்று வரை நம்பமுடியவில்லை,
இன்றுடன் ஓராண்டுகடந்ததென்று...

சச்சியண்ணை என்றும் முதலாளி என்றும் அனைவராலும்
அன்புடனும் பண்புடனும் பாசத்துடன் அழைக்கப்பட்டீர்கள்.
பகிடிகள் பல சொல்வீர்கள் அதை வென்றவர் யாருமில்லை
பாசம் தந்த உங்கள் பூ முகம் சென்றதெங்கே?
மாறாத உங்கள் சிரிப்பும், மறையாத உங்கள் முகமும்,
மனமுருகும் உங்கள் குரலிசையும்
மீண்டும் வராதோ எம் கண் முன்னே….

நற்றவனின் பாதமதை நலமே பற்ற
நானிலத்தில் நம்மை விட்டு மறைந்தே
போனீர்களே அப்பா…… வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வத்துள் தெய்வமாகிவிட்ட
எங்கள் அன்புத் தந்தையின் ஆத்மா சாந்தியடைய
காதவாய்க்கால் விநாயகரையும் புவனி அம்மனையும்,
நல்லூர் முருகனையும் வேண்டி பிரார்த்தனை செய்கிறோம்..

உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 29 மார்ச், 2012மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 3 மார்ச், 20142ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 20 மார்ச், 20153ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. 24 ஏப்ரல், 2017நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.