மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு சிவகுமார்
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 523 மார்ச், 1967 – 10 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புதுக்குளம்
- வாழ்ந்த இடம்
- Ilford, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசு தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், வேலுப்பிள்ளை நவரத்தினம்(Radio Ceylon), சந்திரவதனா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபாஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிநயன், அய்ஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோரஞ்சிதம்(இலங்கை), பரஞ்சோதி(லண்டன்), இராமச்சந்திரன்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), உதயகுமாரி(இலங்கை), மனோகரன்(லண்டன்), சாந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மார்க்கண்டு, தனலட்சுமி, கிருஸ்ணமூர்த்தி, பரமேஸ்வரி, ஜானகி, சிவராசலிங்கம், யாழினி, சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, சாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன், யசோகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள மன்னாரின் புதுக்குளத்தில் புகழ் பூத்த சீமான் திரு.கார்த்திகேசு அவர்தம் பாரியார் இராசு அவர்களின் அருமைப் புத்திரனாக 03/MAR/1967 ஆம் ஆண்டில் திரு.சிவகுமார் அவர்கள் மனோரஞ்சிதம், பரஞ்சோதி, இராமச்சந்திரன், பரமேஸ்வரி, மகேந்திரன் மற்றும் உதயகுமாரி, மனோகரன், சாந்தகுமாரி எனும் அன்பு உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனுன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டார் மேலும் திரு.திருமதி வேலுப்பிள்ளை நவரத்தினம் சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மகள் சுபாஷினி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக அபிநயன், அய்ஷானி போன்ற அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சிவா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் Chennai spice Restaurant, London Edmonton உரிமையாளராக விளங்கியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 10.07.2019 இல் 52 வயதில் பிரித்தானியாவில் உள்ள Ilford நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"மன்னார் மண்ணின்
......மகத்துவ நாயகனே
எண்ணியதை அடைந்து
......எளிமையுடன் வாழ்ந்து
விம்பம் ஆனீர்
.....விந்தை உலகில்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

