ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரித்தம்பி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரித்தம்பி நடராசா

வயது 8124 ஆகஸ்ட், 1935 – 26 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
இணுவில் மேற்கு
வாழ்ந்த இடம்
மன்னார், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் மேற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார், கனடா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி நடராசா அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று மன்னாரில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமாலட்சுமி(பூமா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமாரன்(குமார்- கனடா), சிவலோஜினி(லோஜி- மன்னார்), பகீரதன்(பகீர்- கனடா), பத்மலோஜினி(பட்டு- கனடா), கணபதீஸ்வரன்(ஈஸ்வரன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, மற்றும் செல்லம்மா(கனடா), அன்னம்மா(கனடா), காலஞ்சென்ற இந்திராணி, மற்றும் வன்னியசிங்கம்(பிரான்ஸ்), கமலாதேவி(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி்(தனா- கனடா), Dr.அரவிந்தன்(மன்னார்), வினோதியா(வினோ- கனடா), முரளிதாசன்(முரளி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மகாலிங்கம், கந்தையா, இராசநாயகலிங்கம், மற்றும் ஜெயலட்சுமி(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(ராசு- மன்னார்), பொன்மணி(அவுஸ்திரேலியா), சரஸ்வதி(இணுவில்), இராஜேஸ்வரி(உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம், பேரின்பநாயகம், சீவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சகானா, சாரங்கன், மூஷுகா, ஜெனலியா, ஜெனன், விஸ்மகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப‌ 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல-11, ஆஸ்பத்திரி வீதி, மன்னார் என்னும் முகவரியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.