நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை சிவராஜா
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்
வயது 6917 மார்ச், 1941 – 6 அக்டோபர், 2010
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கை வசிப்பிடமாகவும், பின் வவுனியா, 52 முதலாம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சிவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதியின் அன்புக் கணவரும்,
சுபோதினி(சுபா - கனடா), மேனகா(மேனா - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனகாந்தன்(கனடா), அகிலன்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், நடராஜா, துரைராஜா, பாலசுந்தரம், பொன்னம்பலம் மற்றும் தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பாலச்சந்திரன்(அமெரிக்கா), வசந்தமதி(இலண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, இந்துமதி, சாந்திமதி, ரதிமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஸ், கிஷோன், சுரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறைபதம் அடைந்ததை முன்னிட்டு 05.11.2010 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் நினைவு அஞ்சலி நிகழ்வும், அந்தியேட்டிக் கிரிகையும் இடம் 52, முதலாம் குறுக்குத்தெரு, வவுனியா என்னும் முகவரியில் நடைபெறும் என்பதனை அறியத் தருவதுடன் அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் அறிந்து பங்குக்கொண்டவர்களுக்கும், தொடர்புக்கொண்டவர்களுக்கும் எமது நன்றிகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

