மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குபேரன் வாசுதேவி
வயது 5929 செப்டம்பர், 1959 – 23 ஜூன், 2019
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- London, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குபேரன் வாசுதேவி அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குபேரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவகுமார்(பிரித்தானியா), கிஷோகுமார்(பிரித்தானியா), சபேஷ்குமார்(பிரித்தானியா), ஜிமிலா(கனடா), மிதிலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேமலதா, சபிதா, பத்மசீலன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகாதேவன், சந்திரவதனா, வாமதேவி, வாசுதேவன், இந்திரதேவன், காமதேவன், காலஞ்சென்ற தங்கேஷ்வரி மற்றும் வாமதேவன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சறோயினிதேவி மற்றும் கெங்காதேவி, மகேந்திரன், பாலகுமார், நாகேஷ்வரி, செல்வராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்ஷ்யா, அபிசயா, அபிநயா, அர்வின், அகஸ்தியா, அனனியா, அனந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சங்கானையில் 29/SEP/1959 இல் திரு.திருமதி இரத்தினம் நல்லம்மா அவர்களின் அருமைப் புத்திரியாக வாசுதேவி அவர்கள் மகாதேவன், சந்திரவதனா, வாமதேவி, வாசுதேவன், இந்திரதேவன், காமதேவன், தங்கேஷ்வரி, வாமதேவன், இந்திராதேவி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி.சிவப்பிரகாசம் பரமேஸ்வரி தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு.குபேரன் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜீவகுமார், கிஷோகுமார், சபேஷ்குமார், ஜிமிலா, மிதிலா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கேமலதா, சபிதா, பத்மசீலன், பத்மநாதன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து அக்ஷ்யா, அபிசயா, அபிநயா, அர்வின், அகஸ்தியா, அனனியா, அனந்தியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 23.06.2019 இல் 59 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"தங்க மனம் கொண்ட
தாயே
சிங்க குணம் கொண்ட
நடையுடன்
பங்க மனமற்ற வாழ்வு
வாழ்ந்து
எங்கும் நிலைத்தீர் எதிலும்
வாழ்வீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

