நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தை செல்லத்துரை
வயது 7228 ஆகஸ்ட், 1946 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியை வரை கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி அழைப்பின் மூலமாகவும் எங்கள் துயரத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், இறுதி வரை பல வழிகளிலும் உதவிகளைச் செய்து எமக்கு பக்கபலமாக இருந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய மத்திய மலைநாட்டில் புகழ் பெற்ற முத்துமாரி அம்மன் காட்சி தரும் இடமும் மூவின மக்களும் சந்தோசமாக வாழும் இயற்கை எழில் நிறைந்த மாத்தளையில் 28/Aug/1946 ஆம் ஆண்டில் குழந்தை வள்ளியம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.செல்லத்துரை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி மற்றும் பழனி, சண்முகம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் மேரியோசப்பின்(செல்லம்) என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நிஷாந்தினி, துஷாந்தினி, துஸ்யந்தன், துஸ்யந்தினி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று தெய்வேந்திரன், லிண்டன் ஜான்சன், மெரினா, இலங்கைதீபன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து தனுஜா, அனுஜா, சிந்துஜா, அனுஸ்ரன், லான்சி, கெலனா, லெயானா, தனுயன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் முல்லைத்தீவு செல்வபுரம் மற்றும் பிரான்ஸ் போன்றவற்றில் வாழ்ந்த இவர் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் அன்புள்ளம் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.07.2019 இல் 72 வயதில் இந்தியாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
புன்னகை முகமும்
புதுப் பொலிவும்
கண் மணி போல்
காத்தருளிய உறவே
வெண் முடியுடன்
வீரனாக விளங்கி
மண்ணில் வீழ்ந்து
மரணம் அடைந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

