1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழைந்தைவேலு ஐயம்பிள்ளை
முன்னாள் ஓய்வுபெற்ற பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன உத்தியோகத்தர்
வயது 8327 டிசம்பர், 1935 – 18 ஜூன், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பரந்தன் குமரபுரம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழைந்தைவேலு ஐயம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழி மூடித்திறப்பதற்குள்
எங்கள் வீதிகளெல்லாம் தொலைந்ததென்ன??
வீசியதென்றல் பெரும்புயலாய்
எழுந்து வீறுகொண்டு வீசியதென்ன??
வழிமாறித் தெய்வங்களெல்லாம்
வரம்தருவதற்கே மறுப்பதென்ன??
வழிகின்ற கண்ணீர் வெள்ளம்
வரைகள் கடந்துதான் பாய்வதென்ன??
அழியாத அன்புச்செல்வம்
அரை நொடிக்குள்ளே மறைந்ததென்ன??
அன்பெனும் தீபம் அணைந்து
ஆண்டு ஒன்று ஆனதென்ன..?
கண்களையே தொலைத்துவிட்டு
நாம் கரைதாண்டிடத் துடிக்கின்றோம்...
கருணைமுகங்காட்டி எம்கவலைதனை
போக்கிட கடிதென வந்திடுமையா..!!!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 8ம் வட்டாரத்தில் 27/DEC/1935 இல் திரு.திருமதி குழந்தைவேல் செல்லமுத்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.ஐயம்பிள்ளை அவர்கள் கனகம்மா, மார்க்கண்டு, நல்லம்மா, சிவகாமி, புவனேஸ்வரி, பொன்னம்பலம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் சரஸ்வதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தனலட்சுமி, வசந்தகுமார், உதயகுமார், சிவகுமார், விஜயகுமார், சந்திரகுமார், நித்தியலட்சுமி, வரதலட்சுமி, சத்தியகுமார், நந்தகுமார், விஜயகுமாரி, சசிகலா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து மன்மதராஜன், சிவகுமாரி, கலாநிதி, வதனமதி, புனிதவதி, கல்பனா, மகாலிங்கம், ஆனந்தராஜா, செப்னா, நந்தரூபன், ரட்னேஸ்வரநாதன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அழகுப் பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் உள்நாட்டுப் போர் காரணமாக தீவை விட்டு இடம்பெயர்ந்து பரந்தன் குமரபுரத்தில் தற்காலிகமாக வசித்ததுடன்,பரந்தன் இராசாயன கூட்டுத்தாபன உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன்,பரந்தனில் சந்திரன் ஹொட்டலை நிறுவி சகல உணவுப் பொருட்களும் நிறைந்த உணவக உரிமையாளராக செயற்பட்ட இவர் கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.06.2019 இல் 83 வயதில் பிரித்தானியாவில் உள்ள Londan நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அலைகள் தாலாட்டும் அழகிய தீவில்
நிலையாய் வாழ்ந்து நின்மதி அடைந்து
மலையாய் உயர்ந்த மன்மத வீரன்
கலையில் மிளிர்ந்து கல்வியில் உயர்ந்து
பலருக்கு உதவி பண்பில் நிறைந்து
மறைந்து சென்றீர் மனதில் நிலைத்தீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

