1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி நாகேந்திரம்
வயது 698 ஏப்ரல், 1950 – 6 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- புளியம்பொக்கணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணையை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு போனதய்யா உந்தன்
உருவம் எமைவிட்டு நீங்கி
உலவுதலும் இவ்வுலகை விட்டு நீங்கி
ஓராண்டு போனதய்யா ?
அலகில் சோதியன் அம்பலத்தருகே
அமர்ந்திருக்கும் எம் ஐயனே
எத்தனை ஆண்டுகள் போனால் என்ன ?
எம் இதயத் திரை விட்டு நீங்கிடுமா
உந்தன் நினைவுகள்?
நித்தம் நித்திலமாய்
நின்றுலவும் தரிசனம் தான் விலகுமா?
புளியம் பொக்கணையின் பொக்கிஷமாய் உதித்தவரே !
உளி கொண்டு வாழ்வை கச்சிதமாய் வடித்தவரே!
அழியாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவரே-- எமை
வாழவைத்தவரே!
முதல் ஆண்டு போனதப்பா?
தெளிந்தஞானமாய் எம் முதலே நீதானே அப்பா
வாழ்வின் முன்னுரையும் நீ தானே அப்பா
அதற்கு முடிவுரை உண்டோ அப்பா !
பளிச்சிடும் படிகமாய் எம்வாழ்வினில்
வழி காட்டிடும் தீபமே நீ தான் அப்பா
ஆம்அணையாத தீபமாய்த் தான் எம்முயிர் உள்ளவரை
துணையாக என்றும் கலங்கரை விளக்கமதாய்
சுடர்வாய் என்றும் எம் ஆயுள் உள்ளவரை
தெய்வத்துள் தெய்வமாய் உறைந்த எம் தெய்வமே
வையகம் உள்ளவரை வாழ்ந்திருப்பாய் எம் நெஞ்சகமே !
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி கிழக்கில் 08/APR/1950 ஆம் ஆண்டில் திரு.திருமதி குமாரசாமி அன்னம்மாதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நாகேந்திரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் சிறுவயதில் தாய்,தந்தை அன்பின் மடிமீது இரத்தினசிங்கம், பரமேஸ்வரி, சிவானந்தம், ஜெகதீஸ்வரி, மகேந்திரன் போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரு.திருமதி கந்தையா இராசம்மா சின்னத்தம்பி(குருக்கள்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளான தவமணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக றஞ்ஜினி, மாலினி, நகுலன், அஜந்தன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகேஸ்வரன், சுதாகரன், சாருசா, கிருபா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து மதுசன், விதுசன், றனுசன், கிதுசன், யதுசன், நிதுர்சன், தனுசன், தினுசன், தினுசா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இலங்கை போக்குவரத்து சபையில் சேவை செய்து ஓய்வு பெற்றதுடன் கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்து மனம் கொண்டவரும், தொலைக்காட்சி பார்ப்பதும்,தோட்டவேலை செய்வதும்,பேரப்பிள்ளைகளோடு விளையாடி அவர்கள் குறும்பில் மகிழ்ந்திருந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.10.2019 இல் 69 வயதில் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
சாவகச்சேரி தந்த சரித்திர உறவே
பாவம் செய்யாத பக்குவ மனமே
கோவம் அற்ற குழந்தை உள்ளமே
காலம் உள்ளவரை மனங்களில் நிலைத்து
காவல் தெய்வமாய் காத்தருள்வீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

