மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணநாதன் கெவின்
வயது 1219 ஜனவரி, 2007 – 17 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- Kanton Aargau
- வாழ்ந்த இடம்
- Kanton Aargau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் kanton Aargau Niederlenz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் கெவின் அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், குணநாதன்(வின்சன்) சிவமலர் தம்பதிகளின் ஏக புதல்வனும்,
அஸ்வினா, காலஞ்சென்ற அஸ்வினி ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஞானத்தின் பிள்ளை பாசத்தின் எல்லை
வானத்தைப் போலே வளா்கின்ற நேசம்
கானத்தைப் போலே நீ பேசும் வாா்த்தை
எம்காதில் நின்றே ஒலிக்குமே என்றும்!...
கேட்கின்ற தேவை புரியாமல் நாங்கள்
தவறாகச் சேவை செய்ததை எண்ணி
பலநேரம் மனதுள் பலமாக நோவோம்!…
உளமார உன்னை மன்னிப்புக் கேட்டோம்!...
குறும்பான வாழ்க்கை எமக்காகத் தந்தாய்
அரும்பான பிள்ளை அழகோடு நின்றாய்
பதின்மூன்றை நாளை தொடுகின்ற வேளை
காலன்கைப் பிள்ளை என்றாகிப் போனாய்!…
தொடா்ந்திங்கு வாழ்ந்து எமக்கிங்கு தொல்லை
தரவிரும் பாமல்த் தானோநீ சென்றாய்!…
உனைத்தாங்கி வாழ்தல் எமக்கான பேறு
என்றெல்லோ நாங்கள் சுமைதாங்கி ஆனோம்!…
அக்காவைத் தேடிச் சோ்ந்திடத் தானோ
அவசரம் காட்டிச் சென்று சோ்ந்திட்டாய்!…
துக்கங்கள் கூடித் துவண்டிடும் எங்கள்
மனதினை எண்ணிப் பாா்த்திருப் பாயோ!…
மனதினுள் உந்தன் நினைவுகள் சுமந்து
காலமெலாம் நாம் வாழ்ந்திருப்போமே!…
உந்தனின் ஆத்மா சாந்தியே கொள்ள
உண்மையின் உறவுகள் தொழுதிருப் போமே!...
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

