ஆறுதல்

நன்றி நவிலல்

லக்ஸ்மிகாந்தா ஜீவகன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லக்ஸ்மிகாந்தா ஜீவகன்

முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரி

வயது 648 மார்ச், 1955 – 13 மே, 2019

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
Eastham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

அன்னார் இறையடி எய்திய செய்திக்கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதிநிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும்,கற்பகதரு(பனை) நிறைந்து காணப்படும் இடமும் தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வட்டுக்கோட்டை சங்கரத்தையில் 08/MAR/1955 ஆம் ஆண்டில் Post Master கந்தசாமி அன்னலக்மி தம்பதிகளுக்கு அன்பு மகளாக லக்மிகாந்தா அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் கந்ததாஸ், ஆறுமுகதாஸ், சாரதா, லலிதா, வசந்தா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் பெரியதம்பி மாதுராதேவி தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான ஜீவகன் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் காந்தா என அனைவராலும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராக கடமை செய்ததுடன் தனது குடும்பத்தில் அன்பு கொண்டவராகவும் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், உறவுகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.05.2019 இல் 64 வயதில் பிரித்தானியாவில் உள்ள Eastham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"சங்கரத்தை தந்த
......சரித்திர உள்ளமே
சந்தனப் பேழையே
......குங்குமக் கலரே
அறிவில் சிறந்த
....ஆசிரிய உறவே
ஆண்டவன் அடியில்
......அன்புடன் இளைப்பாறுக"

பிற அறிவித்தல்கள்

  1. 13 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.