ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மகேந்திரா செல்வரூபன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேந்திரா செல்வரூபன்

வயது 4129 அக்டோபர், 1977 – 23 ஜூன், 2019

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா செல்வரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!

இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!!

விளையாட்டுப் பிள்ளை நீ
என்றும் வினை தேடிச்சென்றதில்லை…!
செல்வங்கள் நிறைந்த எங்கள்
செல்வரூபன் நீ…!!

உன்னை உறுத்துவோரை கூட
மனம் வருத்தாது
உதட்டோரம் புன்னகை தெளித்து
கடந்து போகும் உன்னதன் நீ…!

நேற்றுப் போல இருக்கின்றது
காலனிடம் உனை
தோற்றுப்போய் பறிகொடுத்து,
பரிதவித்து நிற்கின்றோம்…!

முப்பத்து ஏழு வருட நம் நட்புக்குள்
ஏழு ஜென்ம பந்தம்...!
நட்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள்
நாம் ஓன்று சேர்ந்து நின்றோம்..!!

கடல்கடந்து சென்றபோதும்
கரை தட்டிடாதது உனது நட்பு
விரைவாக எங்களை நீ
விட்டுச் சென்றதேனோ?

ஆண்டொன்று ஆகியும்,
ஆற மறுக்கிறது எங்கள் மனம்
மீண்டு வருவாயா என
ஏங்கித் தவிக்கின்றோம்…!

நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்...!!

என்றாவது ஒருநாள்,
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்...!
எம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!

— பள்ளித் தோழர்கள்

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியில் புகழ் பூத்த சீமான் திரு.மகேந்திரா அவர்தம் பாரியார் திருமதி மனோன்மணி அவர்களின் அருமைப் புத்திரனாக 29/OCT/1977 ஆம் ஆண்டில் திரு.செல்வரூபன் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் செல்வறஜனி, செல்வகரன், செல்வரதி போன்ற உடன் பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி Dr.சதாசிவம்(மலேசியா Klang) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் Dr.இந்திரா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ரூபன் என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் இவர் Jaffna college லும், உடுப்பிட்டி அமெரிக்கமிஷனிலும் தனது கல்வியை சிறப்பாக கற்று உயர்நிலை அடைந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,சகோதரங்கள்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 23.06.2019 இல் 41 வயதில் பிரித்தானியாவில் உள்ள Liverpool நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"உடுப்பிட்டி மண்ணின்
......உன்னத உறவே
கடுகளகும் மனதில்
......துன்பம் இழையாது
சுடு சொல்
.....ஏதும் போசாத
புன்னகை உறவே
.....போனீரே எமை விட்டு"

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.