ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேந்திரா செல்வரூபன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேந்திரா செல்வரூபன்

வயது 4129 அக்டோபர், 1977 – 23 ஜூன், 2019

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரா செல்வரூபன் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற SR. அரியரட்ணம்(வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி அதிபர்- உடுப்பிட்டி), பூமணி தம்பதிகள், இலகுப்பிள்ளை கந்தசாமி செல்லம்மா(பண்ணாகம்) தம்பதிகளின் மூத்த பேரனும்,

காலஞ்சென்ற மகேந்திரா(உடுப்பிட்டி), மனோன்மணி தம்பதிகளின் மூத்த மகனும், Dr.சதாசிவம்(மலேசியா Klang) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. இந்திரா(மலேசியா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

செல்வறஜனி(பண்ணாகம்), செல்வகரன்(லண்டன்), செல்வரதி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானந்தன்(பண்ணாகம்), குமரன்(இந்தியா), Dr.தேவேந்திரன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. நந்தினி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சங்கீதா, அபிநயா, திவ்வியா, கலியுகன், கபிநயா, காமினி, ஈஸ்வர், ஈசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபினா, அக்சத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியில் புகழ் பூத்த சீமான் திரு.மகேந்திரா அவர்தம் பாரியார் திருமதி மனோன்மணி அவர்களின் அருமைப் புத்திரனாக 29/OCT/1977 ஆம் ஆண்டில் திரு.செல்வரூபன் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் செல்வறஜனி, செல்வகரன், செல்வரதி போன்ற உடன் பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி Dr.சதாசிவம்(மலேசியா Klang) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் Dr.இந்திரா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ரூபன் என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் இவர் Jaffna college லும், உடுப்பிட்டி அமெரிக்கமிஷனிலும் தனது கல்வியை சிறப்பாக கற்று உயர்நிலை அடைந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,சகோதரங்கள்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 23.06.2019 இல் 41 வயதில் பிரித்தானியாவில் உள்ள Liverpool நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"உடுப்பிட்டி மண்ணின்
......உன்னத உறவே
கடுகளகும் மனதில்
......துன்பம் இழையாது
சுடு சொல்
.....ஏதும் போசாத
புன்னகை உறவே
.....போனீரே எமை விட்டு"

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 22 ஜூன், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.