ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா

வயது 664 ஆகஸ்ட், 1953 – 8 அக்டோபர், 2019

பிறந்த இடம்
பாஷையூர்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

காலங்கள் ஆனாலும் ஆறாது எம் இதயம்
அம்மா உனை தேடுகின்றோம் அலறுகின்றோம்
ஆறுதல் தான் தந்திடம்மா கனவிலே வந்திடம்மா
அயராது உழைத்தாயே அனுபவங்கள் தந்தாயே
அன்புடனும் பண்புடனும் அத்தனையும் சேர்த்தாயே

நீ பெற்ற குஞ்சுகள் நாம் நிழல் இன்றி தவிக்கின்றோம்
எம் கைபிடித்த மருமக்களும் தவமாய் கிடக்கின்றனர்
பேரக்குஞ்சுகள் நின் குரல் தேடி அலைகின்றனர்
என்ன தவம் செய்தோமோ நீ எமக்கு கிடைத்திடவே
உன் உடல் தான் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
உங்கள் நினைவுகளைக் காலமெல்லாம் சுமந்து நிற்போம்

அன்பான கணவர், பாசமிகு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள்

சுமைதந்த எம் வேதனையின் 31வது நாளின் நினைவுகளை சுமந்து எமது அன்னைக்கு நாம் திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுக்கப்படும் நாள் 09-11-2019 சனிக்கிழமை பி.ப 4:00 மணிக்கு எம் துயர்ப்பகிர்வில் நேரில் வந்து பங்குகொண்டோர், நேரில் வரமுடியாமல் தொலைபேசி ஊடாகவும் துயர்பகிர்ந்தோருக்கும் கடமைப்பட்டுள்ளோம். குறைகள் இருப்பின் மறந்து அன்னையின் ஆத்மசாந்திக்கான திருப்பலிப் பூசையில் பங்குகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 9 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 8 அக்டோபர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.