1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
வயது 8312 செப்டம்பர், 1935 – 23 மே, 2019
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- ஈச்சமோட்டை, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் டடா...
நீங்கள் பெற்ற பிள்ளைகள்
சந்தோசமாய் இருக்க அயராது உழைத்தீர்கள்
எம்மை விட்டு எங்கே சென்றீர்கள் டடா...
ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்
வாழ்க்கைப் பெருங்கடலில்
வளமான வாழ்வை எமக்கு
அமைத்து தந்து வாழ்க்கை துணைவியை
தவிக்க விட்டு வானகம் சென்றீரோ!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த இளவாலையில் 12/SEP/1935 ஆம் ஆண்டில் இராயப்பு எலிசபேத் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக மரியாம்பிள்ளை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் யோசப், பெனடிக்ற், வணபிதா அல்பிறெட், றோசம்மா, மேரிமாக்றெற் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் மிக்கேல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் றீற்றம்மா என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து சுகந்தினி, மில்றோப், சுபோ, றோய் போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன் பிருந்தா, பெனற், டன்சி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளுடனும் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் இராணுவ இயந்திரப் பொறியியலாளராக கடமையாற்றியதுடன் ஓய்வும் பெற்றார்,அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.05.2019 இல் 83 வயதில் சுவிஸில் உள்ள Basel நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
இளவாலை மண்ணின்
...... இளகிய உள்ளமே
இயக்கிடும் தெய்வமே
.......பொறியியலாளரே
கருணை மனமே
........கலங்கா மனிதனே
காவல் தெய்வமானீர்
......அனைவர் மனதிலும்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

