மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி எட்வீஸ் அன்ரனி
வயது 9028 ஆகஸ்ட், 1928 – 31 மே, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி எட்வீஸ் அன்ரனி அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஏபிரகாம், ஆனாகிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏபிரகாம் அன்ரனி(பிரபல சட்டத்தரணி, சமாதான நீதவான், பதில் நீதவான் -யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மேரி ஆன், காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், ஜொய்ஸ், அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I), தயாளன், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிசிலியா, கொர்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோசவ், இருதயதாஸ், றேமண்ட், பேணடேற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரொஷானி- அலன், சுபா- கெவின், நீலன்- எவலின், பிரியான்- நிஷா, பிருந்தா- ரமணன், ஜெனிபர், ஸ்ரேவன், டினேஷ், ஜெப்றி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈத்தன், எமலியா, சோஃபியா, கேலா, கமரன், டீன், எமறி, டன்டே, இலாய், றைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தில் 28/Aug/1928 ஆம் ஆண்டில் செபஸ்தியாம்பிள்ளை விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளாக மேரி எட்வீஸ் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் சிசிலியா, கொர்னம்மா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும், ஏபிரகாம் ஆனாகிமுத்து தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான யாழ்/ பிரபல சட்டத்தரணியும், பதில் நீதவானுமான ஏபிரகாம் அன்ரனி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து மேரி ஆன், லுடிக்கன்ஸ், ஜொய்ஸ், அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி, தயாளன், நிர்மலா போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், ஜோசவ், இருதயதாஸ், றேமண்ட், பேணடேற் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.05.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அழகிய முகமே
.......அன்புக் கடலே
புன்னகை மலரே
.......புது வசந்தமே
காந்தப் பார்வையே
....... கருனை மாதவே
கலங்க வைத்து
.........கத்தரிடம் சென்றீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

