அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதுஜன் நடராஜா
வயது 193 ஆகஸ்ட், 1999 – 2 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- பேர்ண்
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதுஜன் நடராஜா அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கைதடி வடக்கைச் சேர்ந்த நடராஜா சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
மெதுலா, ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
உலகில் அழகியதும் ஐரோப்பா கண்டத்திலே வளமிகு நாடும் எப்போதும் போர் நடக்காத அமைதி நாடான சுவிஸ்லாந்தின் பேர்ண் நகரில் 03-08-1999 இல் கைதடி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட திரு. திருமதி நடராஜா சுகிர்தா தம்பதிகளுக்கு அருமைப் புத்திரனாக மதுஜன் அவர்கள் அவதரித்தார்.
சிறுவயதில் குறும்புகள் செய்து குதூகலித்து வாழ்ந்தார். இவர் ஒரு பொறுப்புவாய்ந்த மகனாக மெல்ல மெல்ல வளர்ந்ததுடன் மெதுலா, ஆதித்தன் போன்ற உடன்பிறப்புகளுடன் கண்ணை இமை பாதுகாப்பது போல சகோதரங்களைக் கவனித்து வளர்ந்தார். இவர் படிப்பில் திறமைசாலியாகவும், விளையாட்டில்(கால்பந்து) மிக ஆர்வம் கொண்டவராகவும், முதியோரை மதிக்கும் குணம் படைத்தவர், உறவினரில் அதிக அன்பும், மரியாதையும் கொண்டவர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு தந்தை, தாய், சகோதரங்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.04.2019 இல் 19 வயதில் சுவிஸில் பேர்ண் நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு மகனே
அறிவுக் குழந்தையே
ஆசை மலரே
அணைக்கும் உறவே
சின்ன வயதில் எமை
விட்டு பிரிந்து
தவிக்க விட்ட
பாச உயிரே "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.
