31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் அகிலன்
வயது 4028 ஜூன், 1975 – 20 மார்ச், 2016
- பிறந்த இடம்
- அல்வாய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Sheerness
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Sheerness ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அகிலன் மயில்வாகனம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பெற்றவர்க்கு தலை மகனாய்
தம்பி தங்கைக்கு ஆசை அண்ணனாய்
உற்றவர் நண்பர்களுக்கு நல்ல மனிதனாய்
அன்பு மனைவி மகன்களுக்கு
உற்ற துணையாய் பெருமையுடன் வாழ்ந்தீர்
இன்பங்கள் வருமிடத்தில்
இன்முகம் காட்டி நின்றீர்
துன்பங்கள் சேருமிடத்தில்
துணிவு தந்து துணை நின்றீர் – இன்று
கனவிலும் நினைக்காத பெரும் துயர் தந்து
மாயமாய் எங்கே சென்றீர்?
ஐயகோ! சிந்திக்க முடியவில்லை
வாயடைத்து போனோம்
தாய் மண்ணை இறுதியாய்
இதற்காகவா முத்தமிடச் சென்றீர்?
அப்பா எப்போ வருவார்
என்று கேட்ட பிள்ளைகளுக்கு
ஓடி வந்து அன்பு மழை பொழிந்தீர்
இன்றோ அப்பா அப்பா என
கதறும் பிள்ளைகளை
தேற்றவும் முடியவில்லை ....
வாழ்வின் கடைசி நிமிடம் வரை
கண்ணீரை தந்த
ஆண்டவனின் நீதிமன்றில்
நியாயம் கேட்டு விம்முகின்றோம்
ஆண்டவனே எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா உம் காலடியில்....
பத்திரமாய் அமைதியடைய வேண்டுகின்றோம்!
சாந்தி! சாந்தி! சாந்தி!
எம் குடும்பத் தலைவன் எமை விட்டுப் பிரிந்த செய்தியறிந்து நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் சொல்லி எம் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சகல வழிகளிலும் உதவியவர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் 04:00 மணிவரை Castle Connections, Queenborough, ME11 5AY, Uk எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

