மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசபிள்ளை தம்பிராசா
ஓய்வுபெற்ற ஆசிரியர், சமாதான நீதவான்
14 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை தம்பிராசா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசிகரன், சசிகரன், சிறிகரன், வத்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பானுமதி, சுசிகலா, கௌரி, நித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுஷியா, நந்தகோபன், யதுகிஷன், கஸ்தூரி, பிரணவன், அரவிந்த், சிந்துஜன், சௌமியா, சுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படுவதுடன் தமிழர் தாயகப் பகுதியும் அழகு நிறைந்த களப்புமான மட்டக்களப்பில் திரு.திருமதி முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.தம்பிராசா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் சிவமணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வசிகரன், சசிகரன், சிறிகரன், வத்சலா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து பானுமதி, சுசிகலா, கௌரி, நித்தியானந்தன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து விதுஷியா, நந்தகோபன், யதுகிஷன், கஸ்தூரி, பிரணவன், அரவிந்த், சிந்துஜன், சௌமியா, சுஜன் எனும் அழகுப் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன்,சமாதான நீதவானாகவும் சேவை ஆற்றியது மட்டுமல்லாது, கடின உழைப்பாளியும் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.06.2019 இல் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
மட்டு நகரின் பஞ்சுத் தாத்தா
வெட்டுப் பாக்கு மெல்லும் அழகும்
பட்டு மேனி பாதக் கமலம்
தொட்டு ஆசி பெற்று மகிழ்ந்தோம்
வட்ட வதனம் கண்ணில் தோண்ற
எட்டி நடந்து மறைந்து சென்றீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

