ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

முருகேசு நல்லம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு நல்லம்மா

வயது 934 டிசம்பர், 1922 – 27 ஜனவரி, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
திருவையாறு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடம் ஒன்றாகிற்று இம்மண்ணை
விட்டு நீ சென்று
நீ வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ.

வரவேற்பாய் சிரிப்பாலே
வயிராற உணவளிப்பாய் - அது
சீரணிக்க சிரிப்பெனும் மருந்திடுவாய்
அதுவே நீ அம்மா

உளுக்கு எடுக்க
உன்னிடம் வருவோருக்கு
வலி தெரியா மருந்து - உன்
சிரிப்பு வார்த்தைகள் தானே!

வயதெங்கே போனது - உன்
வார்த்தை வர்ணங்களுக்கு!
கோபத்தில் கூட நீ
குறும்பெல்லோ பேசிடுவாய்!

வளவு, வாய்க்கால், வரம்பு,
கோயில், குளம், ஊரெங்கும்
நீ நடந்த நடையை - இப்போ
எவ்வீரர் நடந்திடுவார்

விஷேச வீடெல்லாம்
விஷேசமாவது உன்னால்தானே
வாய் மலர்ந்த சிரிப்பலை வீசும்
வார்த்தைகளின் கடல் – நீ அம்மா

அதிகாலையிலே நீயெழுந்து
திருநீற்று பட்டையுடன்
திருவையாற்று திண்ணையிலே
பக்குவமாய் ௺யமர்ந்து
பாக்கிடிக்கும் ஓசையது
பகலிரவாய் கேக்குதம்மா

குறையொன்றும் உனக்கில்லை
சென்றுவா தாயே
நிறைவாக எம் நெஞ்சில்
நின்று நிலைப்பாயே.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

குடும்பத்தின் ஆணிவேரை இழந்த விழுதுகளாய் நாங்கள்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர்கள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 27 ஜனவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.