மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துச்சாமி செல்வராசா
புத்தூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முன்னாள் முகாமையாளர்
வயது 779 அக்டோபர், 1941 – 9 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுசா(பிரான்ஸ்), கலாதேவன்(சுவிஸ்), கலாரஞ்சினி(ஜேர்மனி), கலாரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணரத்தினம்(இலங்கை), கந்தசாமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருக்கைலாயநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணவேணி(சுவிஸ்), வசீகரன்(ஜேர்மனி), ஜெயா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்திகா, கெளசிகா, துவாரகன்(பிரான்ஸ்), பிரவின், அபிசா(சுவிஸ்), வர்ணிகா(ஜேர்மனி), தஸ்மியன், மதுசாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த சிறுப்பிட்டி மேற்கில் புகழ் பூத்த சீமான் முத்துச்சாமி அவர்தம் பாரியார் சிவக்கொழுந்தின் அருமைப் புத்திரனாக 09/OCT/1941 ஆம் ஆண்டில் திரு.செல்வராசா அவர்கள் இவ் அழகிய பூமியில் திரு.தர்மலிங்கம், திரு.இரத்தினம் போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சகோதரர்களுடனும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான மனோன்மணியை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார்.
முழுக் கதையையும் வாசிக்க
இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக சிவகுசா, கலாதேவன், கலாரஞ்சினி, கலாரூபன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக திருக்கைலாயநாதன், கிருஸ்ணவேணி, வசீகரன், ஜெயா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சிந்திகா, கௌசிகா, துவாரகன், பிரவின், அபிசா, வர்ணிகா, தஸ்மியன், மதுசாயினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் புத்தூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 09.06.2019 இல் 77 வயதில் பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"சிறுப்பிட்டி மண்ணின்
........ சிறந்த மனமே
மறுவற்று வாழ்ந்த
.......உயர்ந்த உறவே
விறுவிறு என செயற்படும்
........விவேக உள்ளமே
கருவறுத்தது காலன்
.....கலங்கி அழுகிறோம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

