மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சசீஸ்குமார்
வயது 4525 மார்ச், 1971 – 10 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், நடராஜா, காலஞ்சென்ற காந்தலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா குணசீலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சவிதன், தர்சன், அஸ்வின், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசீஸ்கரன்(கனடா), சசீஸ்காந்தன்(கனடா), சசீஸ்கலாஜினி(இலங்கை), சசீஸ்கண்ணா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனி, புஸ்பா, துரைச்சாமி, றெஜினா, சகீலா(ஜெயா), ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஸ்கா, அஸ்மிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
விதுசன், மதுசா, சபினா, சகிதன், அபினாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பானுஜன், வினுஜன், மதுசிகா, ஜெனீசா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

