ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகமுத்து தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகமுத்து தியாகராஜா

Bsc, இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, விக்டோரியா இந்த கல்லூரி - சுழிபுரம்

வயது 716 ஜூலை, 1948 – 12 நவம்பர், 2019

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
எதியோப்பியா, Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை கரவர்த்தனையைப் பிறப்பிடமாகவும், எத்தியோப்பியா, கனடா Missassuga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து தியாகராஜா அவர்கள் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கவேல்(குட்டித்தம்பி), சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமுதா, வரதன், புனிதா, நளினா, கோகுலன், மணிவண்ணன், ஜெகதீசன், கவிதா, ஹரிதாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வானிபம் செய்த இடமும், கடலுணவு, மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில் 06/JUL/1948 ஆம் ஆண்டில் திரு.திருமதி நாகமுத்து தங்கம் தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.தியாகராஜா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, தங்கவேல்(குட்டித்தம்பி), சிவலிங்கம் எனும் அன்பு உடன்பிறப்புடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், அழகு நிறைந்த அமுதா, வரதன், புனிதா, நளினா, கோகுலன், மணிவண்ணன், ஜெகதீசன், கவிதா, ஹரிதாஸ் போன்றோரின் சித்தப்பாவாக தனது கடமையை சிறப்பாகச் செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு படித்து யாழ்-இந்துக்கல்லூரி,சுழிபுரம்-விக்டோரியாக் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கடின உழைப்பாளியும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு சகோதரங்கள், உற்றார், உறவினர்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.11.2019 இல் 71 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்

கல்விக் கடலே கடமை வீரனே
வல்ல ஆசானே வாழ்வின் ஒளியே
நின்றாய் தனிமையாக நித்திலம் கொளிக்க
தந்தாய் அன்பை ததும்பத் ததும்ப
சென்றாய் எமை பிரிந்து
தெய்வமே விழிநீர் சொரிகிறோம்

பிற அறிவித்தல்கள்

  1. 11 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.